தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Thalapathy Vijay Master Audio Launch On March 15

சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்திர பிரசாத் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துவருகின்றனர்.XB பிலிம் கிரியேட்டர்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.பிப்ரவரி 14 அன்று மாஸ்டர் படத்தின் முதல் பாடலான குட்டிக்கதை பாடலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Thalapathy Vijay Master Audio Launch On March 15

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது.தற்போது இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என்றும்,இந்த நிகழ்ச்சி சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.