தளபதி விஜய் ரசிகர்களுக்கு வந்த சர்ப்ரைஸ் ட்ரீட்... வாரிசு படத்தின் துள்ளலான ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல் இதோ!

தளபதி விஜயின் வாரிசு பட ஜிமிக்கி பொண்ணு வீடியோ பாடல்,thalapathy vijay in varisu movie jimikki ponnu video song out now | Galatta

இந்திய திரை உலகில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படங்களில் ஒன்றாக தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் தளபதி 67 உருவாகி வருகிறது. சமீபத்தில் தொடங்கப்பட்ட தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அதிரடியான அறிவிப்புகள் வருகிற பிப்ரவரி 1, 2, 3 ஆகிய தேதிகளில் வெளியாகவுள்ளன.

இதனிடையே முதல்முறையாக தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்க, இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில், தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11ம் தேதி பொங்கல் வெளியீடாக உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸான வாரிசு திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றுள்ளது.

தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்யும் வாரிசு திரைப்படத்திற்கு தமன்.S இசையமைத்துள்ளார். 

பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக வாரிசு திரைப்படத்தை மக்கள் குடும்பம் குடும்பமாக திரையரங்குகளில் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு ஸ்பெஷல் விருந்து கொடுக்கும் வகையில் வாரிசு திரைப்படத்திலிருந்து ஜிமிக்கி பொண்ணு பாடல் வீடியோ தற்போது வெளியானது. துள்ளலான அந்த வீடியோ பாடல் இதோ…
 

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே
சினிமா

சூர்யா - வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் அவதார் பட தொழில்நுட்பக்குழு! பிரம்மிப்பான தகவல் குறித்த விவரம் உள்ளே

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!
சினிமா

இயக்குனராக அவதாரம் எடுத்த தளபதி விஜயின் மகன் ஜேசன் சஞ்சய்... வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இதோ!

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!
சினிமா

எப்போது நடிப்பதை நிறுத்துவீங்க... மகனுடன் நேருக்கு நேர் பதிலளிக்கும் RJபாலாஜி - ரன் பேபி ரன் பட கலகலப்பான ஸ்பெஷல் பேட்டி!