தளபதி விஜயின் வாரிசு பட கொண்டாட்டம்... ஸ்பெஷல் ட்ரீட்டாக படக்குழு வெளியிட்ட அட்டகாசமான வீடியோ இதோ!

தளபதி விஜயின் வாரிசு பட செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு வீடியோ,thalapathy vijay in varisu movie celebration of varisu video | Galatta

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக லியோ திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் மாஸ்டர் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் தளபதி விஜய் இணைந்துள்ள லியோ பிளடி ஸ்வீட் திரைப்படத்தின் அதிரடியான அறிவிப்பு வீடியோ கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு வெளிவந்து ரசிகர்களுடைய மிகப்பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

முன்னதாக கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் ரிலீசாகி பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக அனைத்து வயது ரசிகர்களும் கொண்டாடும் திரைப்படமாக ரசிக்கப்பட்டு பிளாக்பஸ்டர் ஹிட் ஆகி 300 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூலித்துள்ளது.

முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடபல்லி இயக்கத்தில் தளபதி விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, SJ.சூர்யா, குஷ்பூ, ஸ்ரீகாந்த், சங்கீதா க்ரிஷ், VTV கணேஷ், சதீஷ், பிக்பாஸ் சம்யுகதா உள்ளிட்டோர் வாரிசு படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முன்னணி தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தனது ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள வாரிசு திரைப்படத்திற்கு கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார். இந்நிலையில் வாரிசு திரைப்படத்தின் செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு வீடியோ பாடல் தற்போது வெளியானது. அட்டகாசமான அந்த செலிப்ரேஷன் ஆஃப் வாரிசு வீடியோ பாடல் இதோ…
 

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!
சினிமா

தளபதி விஜய் ரசிகர்களுக்கு மிரட்டலான சர்ப்ரைஸ் கொடுத்த வாரிசு படக்குழு... ட்ரெண்டாகும் வெறித்தனமான வீடியோ இதோ!

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடியான லியோ... ஸ்வீட்டான அடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ!
சினிமா

தளபதி விஜய் - லோகேஷ் கனகராஜின் அதிரடியான லியோ... ஸ்வீட்டான அடுத்த அப்டேட்கள் குறித்த முக்கிய அறிவிப்பு இதோ!

பிரபல இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான TPகஜேந்திரன் காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

பிரபல இயக்குனரும் நகைச்சுவை நடிகருமான TPகஜேந்திரன் காலமானார்! சோகத்தில் திரையுலகம்