ஃட்ரெண்ட்ங்கில் மாஸ் காட்டிய தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா- அட்டகாசமான TRP ரிப்போர்ட் இதோ!

தளபதி விஜயின் வாரிசு இசை வெளியீட்டு விழா TRPல் சாதனை,thalapathy vijay in varisu audio launch record breaking trp in sun tv | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களின் ஒருவரான தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் தளபதி 67 படத்தில் நடிக்கிறார். இந்திய அளவில் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருக்கும் தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்ட நிலையில் அதிரடியான அறிவிப்புகள் அடுத்த சில தினங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக தளபதி விஜய்யின் வாரிசு திரைப்படம் நேற்று முன்தினம் ஜனவரி 11ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதே தினத்தில் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் ரிலீஸான நிலையில் இரண்டு படங்களும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.  முதல்முறையாக பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள வாரிசு படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தளபதி விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷ்யாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், குஷ்பூ, சங்கீதா க்ரிஷ் உள்ளிட்டோர் வாரிசு திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், வாரிசு படத்திற்கு பிரவீன்.KL படத்தொகுப்பு செய்ய, தமன்.S இசையமைத்துள்ளார்.

முன்னதாக ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்த வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்ற நிலையில், கடந்த ஜனவரி 1ம் நாள் புத்தாண்டு தினத்தன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரியில் இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்பட்ட அந்த மாலை 6:30 மணி முதல் இரவு 9:55 மணி வரையிலான நேரத்தில் 12.90 TRP/TVRம் 10.37 மில்லியன் IMPRESSIONSம் பதிவாகி TRPல் புது சாதனைப் படைத்திருப்பதாக தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

#VarisuAudioLaunch hits 12.90 TVR & 10.37M impressions 🔥#Thalapathy @actorvijay sir @directorvamshi @SVC_official @MusicThaman @7screenstudio @SunTV #Varisu #VarisuPongal‌ #BlockbusterVarisu pic.twitter.com/wDqXbwaP2H

— TheRoute (@TheRoute) January 12, 2023

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ
சினிமா

தளபதி67 அப்டேட் எப்போ..? லோகேஷ் கனகராஜ் அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டிங் வீடியோ இதோ

ஓப்பனிங்கில் மாஸ் காட்டிய அஜித்குமாரின் துணிவு... பாக்ஸ் ஆபிஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!
சினிமா

ஓப்பனிங்கில் மாஸ் காட்டிய அஜித்குமாரின் துணிவு... பாக்ஸ் ஆபிஸ் குறித்த அட்டகாசமான அறிவிப்பு இதோ!

உயிரை விடும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை... ரசிகர் உயிரிழந்தது குறித்து லோகேஷ் கனகராஜின் கருத்து!
சினிமா

உயிரை விடும் அளவிற்கு கொண்டாட்டம் தேவையில்லை... ரசிகர் உயிரிழந்தது குறித்து லோகேஷ் கனகராஜின் கருத்து!