தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy Vijay Bigil Singappenne

Bigil Second Look

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil Singappenne

Bigil Nayanthara

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படத்தின் Firstlook போஸ்டர் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தில் விஜய் ஒரு பாடலை பாடியுள்ளார் என்ற தகவலை படக்குழுவினர் வெளியிட்டனர்.

Bigil Vijay Coach

இந்த படத்தின் முதல் பாடலான சிங்கப்பெண்ணே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தில் தன்னுடைய ஷூட்டிங் பணிகளை தற்போது முடித்துள்ளார் தளபதி விஜய்.

Bigil Thalapathy VIjay

Bigil Thalapathy Vijay

நேற்றுடன் தனது ஷூட்டிங்கை முடித்த தளபதி விஜய் படத்தில் வேலைபார்த்த அனைவர்க்கும் தங்க மோதிரம் பரிசளித்துள்ளார்.மேலும் இது கால்பந்து சம்பந்தப்பட்ட படம் என்பதனால் படத்தில் வீரர்,வீராங்கனைகளாக நடித்தவர்களுக்கு தனது ஆட்டோகிராப் போட்ட கால்பந்தையும் பரிசளித்துள்ளார்.விஜயின் இந்த செயலை படக்குழுவினர் மட்டுமின்றி பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

Vijay gift Goldring Bigil

 

Vijay Gift Bigil Team