தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தளபதி விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீயுடன் இணைந்துள்ள படம் பிகில்.இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

Thalapathy Vijay Bigil FirstDay Chennai Collection

ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி நேற்று வெளியாகியது.ரசிகர்களின் பேராதரவோடு இந்த படம் வசூல் சாதனை படைத்து வருகிறது.

Thalapathy Vijay Bigil FirstDay Chennai Collection

உலகம் முழுவதும் அதிகப்படியான திரையரங்குகளில் வெளியாகியுள்ள இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்த படம் சென்னையில் நேற்று ரூ.1.79 கோடியை வசூல் செய்துள்ளது.2019-ல் சென்னையில் இதுவரை வெளியான படங்களில் முதல் நாள் வசூலில் முதல் இடத்தை இந்த படம் பிடித்துள்ளது.

Thalapathy Vijay Bigil FirstDay Chennai Collection

2.0,சர்கார் படங்களை தொடர்ந்து சென்னையில் முதல் நாள் அதிகவசூல் செய்த படம் என்ற பெருமையையும் பிகில் பெற்றுள்ளது.இந்த சாதனையை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.மேலும் அடுத்த மூன்று நாட்களும் இந்த படம் நல்ல டிக்கெட் புக்கிங்கை பெற்றுள்ளதால் இந்த படத்தின் வசூல்வேட்டை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy Vijay Bigil FirstDay Chennai Collection