தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Bigil Audio Launch

இந்த படத்தில் நயன்தாரா,ஜாக்கி shroff,கதிர்,விவேக்,யோகி பாபு,டேனியல் பாலாஜி,இந்துஜா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது.ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Bigil Audio Launch

கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு இந்த படம் உருவாகி வரும் இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Bigil Audio Launch

தற்போது இந்த படத்தின் இசைவெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி.எப்போதும் இந்த ஒரு தேதிக்காக ஒரு ரசிகையாக நேரில் சென்று தளபதியின் பேச்சை கேட்க நான் காத்திருப்பேன் இப்போது நான் இதை அறிவிக்கிறேன் என்று நினைக்கும்போது பெருமையாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Bigil Audio Launch

இந்த இசை வெளியீட்டு விழா மிகவும் முக்கியமான ஒரு விழாவாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியோடு ,உலக தரம் வாய்ந்த நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

Bigil Audio Launch