தமிழ் சினிமாவின் முன்னணி நாயகர்களில் ஒருவரான தளபதி விஜய் தனது 47ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.இவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21 மாலை 6 மணிக்கு இவர் நடித்து வரும் Beast படத்தின்  பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியிடப்பட்டு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் படங்களின் பர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் எப்போதும் பெரிய சாதனைகளை முறியடிக்கும் அப்படி தற்போதும் ஒரு புதிய சாதனையை படைத்துள்ளது Beast பட பர்ஸ்ட்லுக்.24 மணி நேரத்தில் அதிகம் லைக் செய்யப்பட்ட இந்திய படத்தின் போஸ்டராக நேற்று வரை இருந்தது மாஸ்டர் தான் அந்த சாதனையை தற்போது முறியடித்து முதலிடம் பிடித்துள்ளது Beast பர்ஸ்ட்லுக்.

மேலும் ஒரு பெரிய சாதனையை படைத்ததை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.Beast படத்தினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.கோலமாவு கோகிலா,டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இந்த படத்தினை இயக்கி வருகிறார்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

பூஜா ஹெக்டே இந்த படத்தின் ஹீரோயினாக நடித்து வருகிறார்.யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று முடிந்தது.கொரோனவால் பாதிக்கப்பட்ட இந்த படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.