இயக்குனர் அமீர் இயக்கத்தில் வெளியான பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகனாக அறிமுகமான நடிகர் கார்த்தி தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, சிறுத்தை என தொடர்ந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார்.

மேலும் மெட்ராஸ், கொம்பன், தீரன் அதிகாரம் ஒன்று, கடைக்குட்டி சிங்கம், கைது உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகராக திகழ்கிறார். கடைசியாக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி நடித்த சுல்தான் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 

அடுத்ததாக இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக தயாராகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வல்லவரையன் வந்தியத்தேவன் என்னும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இரும்புத்திரை , ஹீரோ படங்களில் இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் சர்தார் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். சர்தார் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

சென்னையில் இருக்கும் கோகுலம் ஸ்டுடியோவில் சர்தார்  மற்றும் தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெறுகிறது. இந்த படப்பிடிப்பின்போது நடிகர் விஜய்யும் கார்த்தியும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனர் அந்த சந்திப்பின்போது கார்த்தி தற்போது இருக்கும் புதிய லுக்கை பார்த்து தளபதி விஜய் ஆச்சரியப்பட்டுள்ளார். இந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.