தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

thalapathy64

இந்த நிலையில், தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. ஆண்டனி வர்கீஸ், சாந்தனு, மாளவிகா மோஹனன் போன்ற நட்சத்திரங்கள் இணைந்தனர்.

thalapathy64

இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது. சென்னையை அடுத்து செங்கல்பட்டு பகுதியில் அமைந்துள்ள கற்பக வினாநயக கல்லூரி வளாகத்தில் நடைப்பெறவிருந்த பூஜையானது திடீரென்று இடம் மாற்றப்பட்டு, சென்னை தரமணியில் நடைப்பெறவிருக்கிறது. விஜய் 64 திரைப்பட பூஜையில் நடிகர் விஜய் , விஜய்சேதுபதி தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஆகியோர் கலந்துக்கொண்டனர். முதல் முறையாக விஜய் நடிக்கும் திரைப்படத்தில் விஜய் சேதுபதியும் நடிப்பதால் அவரது பெயரும் பூஜை போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.

thalapathy64