தெறி, மெர்சல் ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் பிகில் படத்தில் நடித்துள்ளார் தளபதி விஜய். வரும் தீபாவளி பண்டிகைக்கு திரைக்கு வருவிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64ஆவது படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.

lokeshkanagaraj

அக்டோபர் 3-ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு நடக்கவுள்ளதாக தகவல் நெருங்கிய திரை வட்டாரம் மூலம் தெரியவந்தது. இதற்கிடையில், இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalapathy64

thalapathy64

இந்த நிலையில், தளபதி 64 படத்தில் விஜயுடன் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. விஜய் படத்தில் நடிப்பதற்காக, தனது துக்ளக் தர்பார் படத்தின் படப்பிடிப்பு தேதியை விஜய் சேதுபதி தள்ளி வைத்துள்ளாராம். தளபதியுடன் மக்கள் செல்வன் இணைவது இதுவே முதல் முறை என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் ரசிகர்கள்.

vijaysethupathi