பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Thalapathy 65 To Be Produced By Sun Pictures Vijay

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்றும் இந்த படத்திற்கு விஜயின் சம்பளம் ரஜினிக்கு நிகராக இருக்கும் என்றும் நம்பத்தக்க வட்டாரங்களிடமிருந்து தகவல் கிடைத்துள்ளது.

Thalapathy 65 To Be Produced By Sun Pictures Vijay

இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த படத்தின் இயக்குனர் இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் இது குறித்த செய்திகள் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்டுகிறது.

Thalapathy 65 To Be Produced By Sun Pictures Vijay