தளபதி விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் தீபாவளியையொட்டி நாளை திரைக்கு வரவுள்ளது.இதனை அடுத்து இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகும் தளபதி 64 படத்தில் நடித்துவருகிறார்.

Thalapathy 64 Shooting Spot Video Vijay Meets Fans

இந்த படத்தில் விஜய் சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.மாளவிகா மோகனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.சாந்தனு,ஆண்டனி வர்கிஸ் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

Thalapathy 64 Shooting Spot Video Vijay Meets Fans

இந்த படத்தின் ஷூட்டிங் சென்னையில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று சென்னையின் முக்கிய இடத்தில நடைபெற்று வந்தது.ஷூட்டிங் முடிந்து வெளியே வந்த விஜய் ரசிகர்களை சந்தித்து கையசைத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.