தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரம் என்பதை தாண்டி எப்போதும் ரசிகர்களை மதிக்கும் ஒரு நடிகர் என்றால் அது தளபதி விஜய் தான்.தெறி,மெர்சல் படங்களின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து தற்போது அட்லீ இயக்கத்தில் தயாராகி வரும் பிகில் படத்தில் நடித்து வருகிறார்.

Thalapathy 64

தீபாவளிக்கு ரிலீஸாகவுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் 95% நிறைவடைந்து விட்டது.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் அடுத்த படமான தளபதி 64 படம் குறித்த முக்கிய அறிவிப்பு ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.

Thalapathy 64

தளபதி 64 படத்தை மாநகரம்,கைதி உள்ளிட்ட படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.இந்த படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.விஜயின் மேனேஜர் ஜெகதீஷ் மற்றும் செவன் Screen ஸ்டுடியோவை சேர்ந்த லலித் குமார் இந்த படத்தில் லைன் Producer ஆக பணியாற்றுகிறார்கள். 

 

இந்த படத்தின் ஷூட்டிங் வரும் அக்டோபர் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படம் 2020 சசம்மருக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.