பிகில் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தில் நடித்து வருகிறார்.மாளவிகா மோஹனன் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.இந்த படத்தில் விஜய்சேதுபதி ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Thalapahy 65 Sudha Kongara Narrated A Story

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இதனை தொடர்ந்து விஜய் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்ற தகவல் கிடைத்திருந்தது.

Thalapahy 65 Sudha Kongara Narrated A Story

தற்போது இந்த படத்தை இறுதி சுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்காரா இயக்குகிறார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து விசாரித்த போது சுதா கொங்காரா விஜயை சந்தித்து கதை கூறியுள்ளார் ஆனால் இன்னும் தளபதி 65 இயக்குனர் இன்னும் முடிவாகவில்லை என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.தளபதி 65 படத்தின் இயக்குனர் யார் என்பதை அறிய இன்னும் சிறிது காலம் காத்திருக்கவேண்டும் என்று தெரிகிறது.

Thalapahy 65 Sudha Kongara Narrated A Story

Thalapahy 65 Sudha Kongara Narrated A Story