பேட்ட படத்தின் பிரம்மாண்ட வெற்றியை அடுத்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தயாராகியுள்ள தர்பார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் பொங்கல் 2020 அன்று வெளியாகவுள்ளது.

Thalaivar 168 Shoot to Start on December 18 Rajini

இதனை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தில் நடிக்கவுள்ளார்.தலைவர் 168 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கவுள்ளார்.இந்த படத்தின் எடிட்டராக ரூபன் பணியாற்றவுள்ளார்.இமான் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Thalaivar 168 Shoot to Start on December 18 Rajini

தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் டிசம்பர் 18ஆம் தேதி தொடங்கும் என்ற தகவல் நம்பத்தக்க வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thalaivar 168 Shoot to Start on December 18 Rajini