தர்பார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த், சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தின் டைட்டில் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தின் மூலம் சிறுத்தை சிவா முதன் முறையாக சூப்பர்ஸ்டார் ரஜினியுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். 

rajinikanth

தற்காலிகமாக தலைவர் 168 என அழைக்கப்பட்டு வருகிறது. வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். படத்தில் கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ், மீனா, சதீஷ் மற்றும் குஷ்பு இணைந்துள்ளனர் என்ற அதிகாரப்பூர்வ செய்தி சன் பிக்சர்ஸ் வாயிலாக வெளியானது. 

rajinikanth

இந்த படம் 2020 ஆயுதபூஜைக்கு வெளியாகும் என்ற தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. நடிகர் சித்தார்த் படத்தில் முக்கிய ரோலில் இருப்பதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டில் அண்ணாத்த என்றும் பேச்சு போய்க்கொண்டிருக்கிறது. இப்படக்குழுவுடன் இணைந்த நடிகை நயன்தாரா வக்கீல் ரோலில் நடிக்கிறார் என்று பேசப்படுகிறது. இந்நிலையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் கெட்டப் கொண்ட பிரத்தியேக புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.