நடிகர் விவேக் நேற்று மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஆஞ்சியோ மற்றும் எக்மோ சிகிசச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் அரவது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லாததால் 24 மணி நேரத்திற்கு பிறகே சொல்ல முடியும் என அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் நேற்று மாலை தெரிவித்தனர்.

இந்நிலையில் இன்று காலை நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விவேக்கின் உடல் சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு விருகம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விவேக் 1961ஆம் ஆம் ஆண்டு கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பை ஊரணி கிராமத்தில் பிறந்தார். இயக்குநர் சிகரம் பாலச்சந்தரின் மனதில் உறுதி வேண்டும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இதுவரை 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள விவேக் ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். சமூக சீர்திருத்த கருத்துக்களை தனது நகைச்சுவையில் வெளிப்படுத்தி வந்த நடிகர் விவேக், சின்னக்கலைவாணர் என்றும் அழைக்கப்பட்டு வந்தார். நடிகர் விவேக்கின் கலைப்பயண சேவையை பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்துள்ளது.

நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி, மயில்சாமி, இயக்குனர் தரணி போன்றோர் மறைந்த நடிகர் விவேக்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். மேலும் நடிகர் விவேக்கின் ரசிகர்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

tamil actors pays last respect to actor vivek tamil actors pays last respect to actor vivek tamil actors pays last respect to actor vivek