உலக நாயகன் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திரமாக நடித்த களத்தூர் கண்ணம்மா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ராஜாதி ராஜா  போன்ற படங்களில் நடித்துள்ள பிரபல நடிகர் ஜி.ராமச்சந்திரன் நாட்டுப்புறப்பாட்டு, எட்டுப்பட்டி ராசா ,வீரத்தாலாட்டு, மனுநீதி போன்ற பல தமிழ் திரைப்படங்களிலும் பல  கன்னடத் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராகவும் திரையுலகில் தனது ஜி.ஆர்.கோல்ட் பிலிம்ஸ் சார்பில் பல திரைப்படங்களை தயாரித்துள்ளார். தமிழில் மனுநீதி, சவுண்ட் பார்ட்டி, காசு இருக்கணும்,  எங்க ராசி நல்ல ராசி உள்ளிட்ட பல திரைப்படங்களை தமிழிலும் கன்னடத்திலும் தயாரித்துள்ளார். 

திரு.ஜி.ராமச்சந்திரன் அவர்களுக்கு சிவகுமார், சாமிகுமார் என இரண்டு மகன்கள்  உள்ளனர். முன்னதாக திரு.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் மனைவியும் தயாரிப்பாளருமான ஆர்.பி.பூரணி மாரடைப்பால்  சில தினங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் தயாரிப்பாளர் ஜி ராமச்சந்திரன் இன்று அதிகாலை உயிரிழந்துள்ளார். 73 வயதான திரு ஜி ராமச்சந்திரன் உடல் நிறைவு குறைவு காரணமாக இன்று அதிகாலை உயிரிழந்துள்ளது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மறைந்த தயாரிப்பாளர் ஜி.ராமச்சந்திரனின் இறுதிச்சடங்குகள்   மாங்காட்டில் உள்ள அவரது பண்ணை வீட்டில் இன்று மாலை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது மறைந்த தயாரிப்பாளரும் நடிகருமான இராமச்சந்திரனின் மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.