தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.2017-ல் வெளியாகி சூப்பர்ஹிட்டான அதே கண்கள் படத்தின் இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கம் பெட்ரோமாக்ஸ் படத்தில் நடித்து வருகிறார்.ஹாரர் காமெடி படமாக இந்த படம் உருவாகி வருகிறது.

யோகி பாபு,ராமதாஸ்,மன்சூர் அலி கான்,விஜய் டிவி புகழ் TSK உள்ளிட்டோர் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.Eagle Eyes Productions இந்த படத்தை தயாரித்து வருகின்றனர்.இந்த படத்தின் Firstlook போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த போஸ்ட்டரை ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்டுள்ளார்.இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.