தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தமன்னா.தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று அனைத்து மொழிகளிலும் நடித்து அசத்தியுள்ளார்.தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகமான இவர் தொடர்ந்து வியாபாரி,படிக்காதவன்,அயன்,பையா,சுறா,சிறுத்தை,வேங்கை,வீரம் என்று கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடிபோட்டு விட்டார் தமன்னா.

தெலுங்கிலும் முன்னணி நடிகர்களோடு ஜோடி போட்ட தமன்னா.சில ஹிந்தி படங்களிலும் நடித்திருந்தார்.இதனை தொடர்ந்து இவர் விகடன் தயாரித்து ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாக இருக்கும் வெப் சீரிஸில் தமன்னா ஹீரோயினாக நடித்து வருகிறார்.The November story என்று இந்த தொடருக்கு படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த தொடர் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து சில படங்களில் நடித்து வருகிறார் தமன்னா.நடனத்திலும்,உடற்பயிற்சியிலும் மிகவும் ஆர்வம் காட்டும் தமன்னா.அவ்வப்போது தனது நடன வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.மேலும் பில்லோ சேலஞ் உள்ளிட்ட சில சேலஞ்களையும் பதிவிட்டு வந்தார்.இவை இணையதளங்களில் வைரலாகி வந்தன.

இவர் நடித்திருந்த சீட்டிமார் திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.தற்போது ஹாட்ஸ்டாரில் இவர் நடித்துள்ள The November story வெப் சீரிஸ் வரும் மே 20ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவல் கிடைத்துள்ளது.