டக்கு முக்கு திக்கு தாளம் படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியீடு !
By Aravind Selvam | Galatta | October 11, 2019 18:04 PM IST

அழகி,சொல்ல மறந்த கதை போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர் தங்கர்பச்சான்.தொடர்ந்து சில படங்களை இயக்கிய இவர் பள்ளிக்கூடம் உள்ளிட்ட சில படங்களில் நடிகராகவும் தனது முத்திரையை பதித்திருந்தார்.
தற்போது டக்கு முக்கு திக்கு தாளம் என்ற படத்தை இயக்கிவருகிறார்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் நேற்று வெளியிடப்பட்டது.தங்கர்பச்சானின் மகன் விஜித் பச்சன் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறார்.முண்டாசுப்பட்டி ராமதாஸ் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.இந்த போஸ்ட்டரை வெற்றிமாறன் மற்றும் RJ பாலாஜி வெளியிட்டுள்ளனர்.