ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் உள்ளங்களில் இடம் பிடித்தவர் டாப்ஸீ.இடையில் தமிழ் படங்களில் நடித்தாலும் அதன்பிறகு ஹிந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார்.சமீபத்தில் வெளியான கேம் ஓவர் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்துள்ளார்.

Taapsee Gameover

இந்த படம் விமர்சகர்களிடமும்,ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து இவர் தமிழில் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது கிடைத்துள்ளது.மனிதன்,என்றென்றும் புன்னகை உள்ளிட்ட படங்களை இயக்கிய அஹமத் அடுத்ததாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்குகிறார்.

Jayam Ravi Ahmed

இந்த படத்திற்கு ஜன கன மன என்று பெயரிட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்தன.தற்போது இந்த படத்தில் டாப்ஸீ ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் Azerbaijan-ல் இன்று தொடங்கியுள்ளது என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Jayam Ravi Taapsee