பிரபல தொகுப்பாளராக மீடியாவிற்குள் என்ட்ரி கொடுத்தவர் ஸ்வாதிஷ்டா கிருஷ்ணன்.மெட்ராஸ் சென்ட்ரல் யூடியூப் சேனலில் வெளியான Half Boil வெப் சீரிஸ் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவராக மாறினார் ஸ்வாதிஷ்டா.யூடியூப் புகழ் கோபி,சுதாகர் நடிப்பில் உருவான இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்தது.

இந்த தொடரில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கத்தொடங்கினார் ஸ்வாதிஷ்டா.இளைஞர்கள் இவரை இன்ஸ்டாவில் பின்தொடர இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.வெகு விரைவில் ரசிகர்களின் கனவுக்கன்னியாக மாறினார் ஸ்வாதிஷ்டா.

சவரகத்தி,கீ உள்ளிட்ட படங்களில் சிறப்பு தோற்றத்தில் நடித்தும் அசத்தியுள்ளார் ஸ்வாதிஷ்டா.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.நடனத்திலும் ஆர்வம் கொண்ட இவர் தனது நடன வீடியோக்களையும் அவ்வப்போது பகிர்வார்.

தற்போது இவர் ஹீரோயினாக நடித்துள்ள படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.இவர் தெலுங்கில் Gunde Katha Vintara என்ற படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.ஹீரோயினாக அறிமுகமாகும் ஸ்வாதிஷ்டாவிற்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.