உலக அழகியாக என்றும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பவர் நடிகை ஐஸ்வர்யா ராய். கடந்த 1994-ம் ஆண்டு மிஸ் இந்தியா பட்டத்தை வென்றவர் பாலிவுட்டின் முன்னணி நடிகையாக நடித்து வந்தார். மணிரத்னம் இயக்கிய இருவர் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர், தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ராவணன், எந்திரன் போன்ற பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். 

SV Sekar Finds Aishwarya Rai Lookalike On Tik Tok

ஐஸ்வர்யா ராய் நடித்த கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தின் வசனத்தை பேசி டிக்டாக் செய்துள்ளார் இணையவாசி ஒருவர். அந்தப் பெண் ஐஸ்வர்யா ராய் போல இருக்கிறார் என்று புகழ்ந்து தள்ளினர் நெட்டிசன்கள். கடந்த சில நாட்களாகவே இந்த டிக்டாக் பெண் ட்ரெண்டானாலும், தற்போது திரைப்பிரபலங்களின் மத்தியில் வைரலாகி வருகிறார். 

SV Sekar Finds Aishwarya Rai Lookalike On Tik Tok

இந்நிலையில் நடிகர் SV சேகரின் பார்வைக்கு எட்டியது இந்த வீடியோ. இந்த வீடியோவை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, டிக்டாக் மூலம் தமிழ் திரை உலகிற்கு இன்னும் ஒரு ஐஸ்வர்யா ராய் என பதிவு செய்துள்ளார். ஷங்கர் இயக்கிய ஜீன்ஸ் படத்தில் ஐஸ்வர்யா ராயின் தந்தையாக நடித்திருப்பார் SV சேகர். சமூக வலைத்தளங்களின் மூலம் பிரபலமடைந்த பல பேர் தற்போது சினிமா துறையில் நடித்து வருகிறார்கள். இந்த டிக்டாக் பெண்ணுக்கும் அந்த அதிர்ஷ்ட்டம் அமையுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.