தமிழ் தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சியான கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து வரும் நிறுவனம் சன் தொலைக்காட்சி.மக்களின் மனம் கவர்ந்த சீரியல்கள்,திரைப்படங்கள்,புதிய கேம் ஷோக்கள் என்று ரசிகர்களுக்காக புதிதாக ஏதேனும் ஒன்றை செய்து வருவார்கள்.

சன் டிவியின் சீரியல்களுக்கென்றும்,ஷோக்களுக்கு என்றும் தனியொரு ரசிகர் பட்டாளமே உள்ளது அனைவரும் அறிந்ததே.பல சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடித்து விட்டன.கொரோனா தாக்கம் காரணமாக மூன்று மாதங்கள் ஷூட்டிங் நிறுத்தப்பட்டு பின்னர் தொடங்கியது.கொரோனா பாதிப்பு காரணமாக சில தொடர்களில் நட்சத்திரங்கள் மாற்றப்பட்டனர்.

சில தொடர்கள் எந்த காரணமுமின்றி கைவிடப்பட்டன.சில தொடர்கள் நட்சத்திரங்கள் பங்கேற்க முடியாததால் கைவிடப்பட்டன.பல தொடர்கள் முடிக்கப்பட்டாலும் ரசிகர்கள் மனதை கவரும் படி புதிய சீரியல்களை சன் டிவி நிறுவனம் ஒளிபரப்பி வருகின்றது.புதிதாக ஒளிபரப்பட்ட தொடர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று TRP-யிலும் சாதனை படைத்து வருகின்றன.

சன் டிவியில் சில மாதங்களுக்கு முன் ஒளிபரப்பை தொடங்கிய  பிரபல சீரியல்களில் ஒன்று திருமகள்.Harika Sadu இந்த தொடரின் நாயகியாக நடித்துள்ளார்.சுரேந்தர் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார்.ஷமிதா,சுஷ்மா நாயர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வந்தனர்.சில காரணங்களால் இந்த தொடரின் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சுஷ்மா நாயர் விலகியுள்ளார் என்ற தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.இதனால் இந்த தொடரின் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

A post shared by Sushma Nair (@sushmanair07)