நொடிக்கு நொடி சுஷாந்த் சிங்கின் தற்கொலை மரணத்திற்குப் பின்னால் உள்ள காரணங்கள் மர்ம முடிச்சுகள் போல தொடர்ந்து கொண்டே போகின்றது. இந்நிலையில் பிரபல செய்தி சேனலில் பணியாற்றும் பத்திரிகையாளர் ஒருவர், ரியா சக்கரவர்த்தி பிளாக் மேஜிக் ஏவி சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தள்ளியதாக திடுக்கிடும் தகவல் ஒன்றை அளித்துள்ளார்.

பாலிவுட் மாஃபியா, நெபோட்டிசம், பெரிய நடிகர்களின் ஆதிக்கம் என பல விஷயங்கள் சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு காரணம் என இணைத்து பேசப்பட்டு வந்த நிலையில் தற்போது முழு கவனமும் அவரது காதலி ரியா சக்கரவர்த்தி மீது திரும்பியுள்ளது. வட இந்திய சின்னத்திரையிலிருந்து பெரிய திரைக்கு வந்து ஜொலிக்கும் ஒருசில நட்சத்திரங்களில் ஒருவர் தான் நடிகையும் சுஷாந்த் சிங்கின் காதலியுமான ரியா சக்கரவர்த்தி. தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றிக்கொண்டிருந்த ரியா மேரி டாக் கி மாருதி என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். 

சுஷாந்த் சிங்கின் தந்தை பீகார் காவல் நிலையத்தில் ரியாவின் மீது தற்கொலைக்கு தூண்டுதல், திருட்டு, தவறான தகவல்களை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் விசாரணை செய்ய ரியா சக்கரவர்த்தியை அணுகியபோது அவர் தற்பொழுது தலைமறைவு ஆகியுள்ளது போலீசாருக்கு மேலும் சந்தேகத்தை அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் பிரபல பத்திரிகையாளரான மர்யா சகில் தனது ட்விட்டர் பக்கத்தில் சுஷாந்த் சிங்கின் மீது ரியா பிளாக் மேஜிக் ஏவி விட்டு தற்கொலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவரின் தங்கை நீது சிங் தற்பொழுது பரபரப்பு தகவல் ஒன்றை அளித்துள்ளதாக தெரிவித்தார். இந்த பதிவு தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது. 

இதுகுறித்து நடிகை நீது சந்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷாந்த் சிங்கின் தங்கை மிது சிங் சொல்லியிருக்கும் செய்திகளை பார்த்தும் கேட்டும் அதிர்ந்து போயுள்ளேன். சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தள்ளியுள்ள ரியா சக்கரவர்த்தியின் இந்த செயல் என்னை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 

ஒருவர் தன்னுடைய காதலியை தேர்ந்தெடுத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறிக் கொண்டும் சுக துக்கங்களில் பங்கேற்று எப்போதும் துணையாக இருப்பதை பார்த்துள்ளேன். மேலும் ரியா சக்கரவர்த்தி வழக்கில் சிபிஐ துரித நடவடிக்கை எடுத்து சுஷாந்த் சிங்கின் மரணத்திற்கு விரைவில் நீதி வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார். இதை பார்த்த சுஷாந்தின் ரசிகர்களும், தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.