லைக்கா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் காப்பான். இப்படத்தில் நடிகர் சூர்யாவுடன் நடிகை சாயிஷா மற்றும் பிரேம், சமுத்திரக்கனி, ஆர்யா நடிக்கின்றனர். மேலும் மலையால சூப்பர் ஸ்டாரான மோகன்லால் அவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கின்றனர். 

இயக்குனர் கே.வி.ஆனந்த் சூர்யா படத்திற்கு மீட்பான், காப்பான், உயிர்கா என மூன்று டைட்டிலை பதிவிட்டு, இதில் எந்த டைட்டில் வைக்கலாம் என ரசிகர்களிடம் கேட்டார். இப்படத்தின் டைட்டில் காப்பான் என புத்தாண்டு அன்று பெயரிடப்பட்டு, இதன் முதல் லுக் வெளியானது. கையில் துப்பாக்கியுடன் உள்ள சூர்யாவின் மாஸான கெட்டப் கொண்ட முதல் லுக் போஸ்டர் அனைவரையும் ஈர்த்து வருகிறது.

காப்பான் படத்தின் பாடல் ரெகார்டிங் பணியில் இருப்பதாக ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி 19-ம் தேதியான இன்று துவங்கியது. இதில் படத்தின் வில்லன் சிராக் ஜானி கலந்துகொண்டார். ஆக்ஷன் நிறைந்த சண்டை காட்சிகளை படம்பிடிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது படப்பிடிப்பு தளத்திற்கு புதிய லுக்கில் சென்றிருக்கிறார் நடிகர் சூர்யா. அந்த லுக்கை நடிகர் சூர்யாவின் ரசிகர்களே வெளியிட்டனர்.