சூரரைப் போற்று படத்தை அடுத்து நவரசா என்ற ஆந்தாலஜியில் கவுதம்மேனன் கதையில் நடித்தார் சூர்யா. தற்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம் சூர்யா 40 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. 
பிரியங்கா மோகன் ஹீரோயினாக நடிக்கிறார். சமீபத்தில் படக்குழு ஒரு போஸ்டரை வெளியிட்டது. 

இதனிடையே கடந்த ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டது. ஜல்லிக்கட்டு தொடர்பான படம் என்பதாலும் சூர்யா - வெற்றிமாறன் கூட்டணி முதல்முறையாக இணைந்திருப்பதாலும் இந்தப் படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. 

இந்நிலையில் வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்து கொண்டிருக்கும் படத்தின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. கூட்டத்தில் ஒருவன் பட புகழ் இயக்குனர் ஞான வேல் இயக்கி வரும் படத்தில் சூர்யா ஒரு நீளமான கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறாராம். தற்போது வரை இந்த படத்தின் படப்பிடிப்புகள் நடந்து வருவதாகவும், படத்தைப் பற்றிய செய்திகளும் வெளிவந்ததில்லை.

ஆனால் இந்த படம் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாம். இதில் சூர்யா ஒரு வழக்கறிஞர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் ஒரு சமூக கருத்துக்காக எடுக்கப்படும் இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து கொண்டிருக்கிறது.

இதுவரை சீக்ரெட்டாக வைத்திருந்த இந்த படத்தின் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கலாம் என காத்திருந்த சூர்யாவுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளதாம் இந்த கசிந்த புகைப்படங்கள்.