நவரசத்தின் ஒன்பது உணர்வுகளை உணர்த்தும் வகையில் 9 எபிசோடுகளை உள்ளடக்கிய வெப்சீரிஸ் நவரசா. இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாக்ஷ்னின் க்யூப் சினிமா டெக்னாலஜிஸ் இணைந்து தயாரித்துள்ள புதிய ஆன்தாலஜி வெப்சீரிஸ் நவரசா வருகிற ஆகஸ்ட் 6ஆம் தேதி நெட்பிளிக்ஸ் OTT தளத்தில் நேரடியாக வெளியாகிறது.. 

கிட்டார் கம்பி மேலே நின்று, பீஸ், ப்ராஜெக்ட் அக்னி, சம்மர் ஆஃப் 92, இன்மை, எதிரி, துணிந்தபின், பாயாசம் என ஒன்பது உணர்வுகளை உணர்த்தும் ஒன்பது எபிசோடுகளை, இயக்குனர்கள் கௌதம் வாசுதேவ் மேனன், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ப்ரியதர்ஷன், அரவிந்த்சுவாமி, ரதீந்திரன்.R.பிரசாத், பிஜோய் நம்பியார், சர்ஜுன் மற்றும் வசந்த் சாய் என ஒன்பது இயக்குநர்கள் இயக்கியுள்ளனர்.

நடிகர்கள் சூர்யா, அரவிந்த்சுவாமி, விஜய் சேதுபதி, அசோக் செல்வன், யோகிபாபு, அதர்வா, கௌதம் வாசுதேவ் மேனன், பிரசன்னா, சித்தார்த், பிரகாஷ்ராஜ், பாபி சிம்மா, டெல்லிகணேஷ், ரேவதி, பார்வதி, ரம்யா நம்பீசன், அதிதி பாலன், பூர்ணா, பிரயாகா மார்டின், அஞ்சலி, ரித்விகா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நவரசா வெப் சீரிஸிலிருந்து ஒவ்வொரு பாடல்களாக தினமும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கிட்டார் கம்பி மேலே நின்று எபிசோடில் இருந்து தூரிகா, அலை அலையாக மற்றும் நானும் ஆகிய பாடல்கள் வெளியானது. தற்போது  மேலும் ஒரு புதிய பாடல் தற்போது வெளியாகி உள்ளது அதிருதா என்னும் அழகான பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்.