1975-ல் தமிழ் சினிமாவில் அபூர்வ ராகங்கள் படத்தின் மூலம் நுழைந்த ஒரு இளைஞர் பல தலைமுறைகளை கடந்து இன்றும் தமிழ் சினிமாவின் மன்னனாக திகழ்ந்து வருகிறார்.ஒரு ஹீரோவுக்கான முகம் இல்லை என்று விமர்சிக்கப்பட்ட இவர் தான் இன்று இந்திய சினிமாவின் முகமாக இருக்கிறார்.ஆறிலிருந்து அறுபதுவரை இவரது புகழை பற்றி தெரியாதவர்கள் எவருமில்லை.இவரது படங்கள் வெளிவரும் போதெல்லாம் வீதிகள் வெடிசத்தத்தால் அதிரும்,திரையரங்குகள் திருவிழா கோலம் பெரும். அப்படி என்ன ரஜினி மீது தமிழ் மக்களுக்கு ஈர்ப்பு என்பதை பார்க்கலாம்

Superstar Rajinikanth Celebrates 45Years in Cinema

குணச்சித்திர நடிகர்,வில்லன் என்று படிப்படியாக முன்னேறிய ரஜினிகாந்த் சூப்பர்ஸ்டார் என்னும் அந்தஸ்தை அடைந்தார்.பைரவி,ஜானி,முள்ளும் மலரும் என்று தனது இயல்பான நடிப்பின்மூலம் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்த ரஜினிகாந்த்.எஸ்.பி.முத்துராமனின் படங்களின் மூலம் கமர்சியல் நாயகனாக உருவெடுத்தார்ஒவ்வொரு படத்திலும் தனது ஸ்டைலால் ரசிகர்களை அசரவைத்தார் ரஜினிகாந்த் .அண்ணாமலை மியூசிக்குடன் வரும் அந்த சூப்பர்ஸ்டார் கார்டிற்கு தலைவா என்று தொண்டைகிழிய கத்தாத ரசிகர் எவரும் இருக்கமாட்டார்கள்.

Superstar Rajinikanth Celebrates 45Years in Cinema

தலைமுடியை கோதிவிடுவது,கண்ணாடி போடுவது,சிகரெட் பிடிப்பது என்று இவரது அக்மார்க் ஸ்டைல்களை வாழ்க்கையில் ஒரு முறை ட்ரை செய்யாத ரசிகர்களும் இல்லை.அவர் நடந்தாலும் ஸ்டைல் தான் அவர் எது பண்ணாலும் ஸ்டைல் தான்.4 தலைமுறையா முன்னணி நடிகரா இருக்கது ரொம்பவும் கஷ்டம் அதுலயும் இப்போ இருக்க ஹீரோஸ் வர எல்லாருக்கும் டப் குடுக்குற ஒரே ஆள் சூப்பர்ஸ்டார் தான்.எப்போதும் தனது ரசிகர்களை என்னை வாழவைக்கும் தெய்வங்களே என்று தான் ரஜினி குறிப்பிடுவார்.சினிமாவை தாண்டி இவரது மேடை பேச்சுகளும் ரசிகர்களிடம் வெகுவாக வரவேற்பை பெற்றது.

Superstar Rajinikanth Celebrates 45Years in Cinema

கடினஉழைப்பும்,தன்னம்பிக்கையும் இருந்தாலும் யார் வேண்டுமானாலும் என்னவேண்டுமானாலும் ஆகலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இவர் தான்.இன்றும் இவரது படங்கள் ரிலீஸ் ஆனால் இந்திய முழுவதும் உள்ள பெரிய நடிகர்கள் இவரதுபடங்களுடன்  போட்டிபோட பயப்படுவார்கள்.இன்றுவரை இவரது எனர்ஜியை பீட் செய்யும் நடிகர் இல்லை இனியும் வரப்போவதில்லைபிளாக் அண்ட் வைட்,கலர்,கிராபிக்ஸ்,3D என்று பல பரிமாணங்களில் நடித்துள்ள நடிகர்.இந்த படையப்பாவின் ஆட்டம் 4 தலைமுறைகள் அல்ல இன்னும் 40 தலைமுறைகள் தாண்டியும் இருக்கும் என்பது சந்தேகமில்லை.நமது அண்ணாத்த எல்லா பேட்டையிலும் தர்பார் அமைக்க கலாட்டா சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Superstar Rajinikanth Celebrates 45Years in Cinema