சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் கடந்த பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார்.இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும்,விமர்சகர்கள் மத்தியிலும் சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து விஸ்வாசம் பட இயக்குனர் சிவா இயக்கத்தில் தயாராகி வந்த அண்ணாத்த படத்தில் நடித்து வந்தார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.

இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வந்தது.டி இமான் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.இந்த படத்தில்நயன்தாரா,சதிஷ்,சூரி,கீர்த்தி சுரேஷ்,பிரகாஷ் ராஜ்,மீனா,குஷ்பூ உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இந்த படம் பொங்கல் 2021-க்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் தடைபட்டுள்ளது.இந்த படத்தின் ஷூட்டிங் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது,இதனால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போகும் என்று தெரிகிறது.ஷூட்டிங் தொடங்கிய பின் புது ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு வாழ்த்து வீடியோ ஒன்றை வெளியிட்ட இயக்குனர் சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஒரு வீடியோ வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர் , அதில் கொரோனா காரணாமாக பாதிக்கப்பட்ட இந்த படத்தின் ஷூட்டிங் வரும் டிசம்பர் 15ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்குகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.ஷூட்டிங் மீண்டும் தொடங்குவதை அடுத்து ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்