பிகிலா ? கைதியா ? சூப்பர்ஸ்டார் பார்த்து ரசித்த படம் எது ?
By Aravind Selvam | Galatta | November 05, 2019 17:27 PM IST

2019 தீபாவளியை முன்னிட்டு விஜய் நடித்த பிகில், கார்த்தி நடித்த கைதி திரைப்படங்கள் வெளிவந்தன.இரண்டு படங்களுமே ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகின்றன.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஒரு திரையரங்கில் படம் பார்ப்பது போல் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் உலவி வந்தன.இது என்ன படம் என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருந்தனர்.ரஜினிகாந்த் பிகில் பார்த்தார் என்று சிலரும்,கைதி பார்த்தார் என்று சிலரும் தெரிவித்து வந்தனர்.
இதுபற்றி விசாரித்தபோது அவரது நண்பர் ஒய்.ஜி.மகேந்திரன் நடித்த மலையாள படமான ஷ்யாம ராகம் என்ற படத்தின் சிறப்பு காட்சி Four பிரேம்ஸ் பிரிவியூ திரையாங்கில் போடப்பட்டது.தனது மனைவி லதா ரஜினிகாந்துடன் கலந்துகொண்டு கண்டு மகிழ்துள்ளார்.