ரஜினிகாந்த் மகள் சவுந்தர்யாவுக்கும் கோவை தொழிலபதிபர் விசாகனுக்கும், திருமணம் நிச்சயிக்கப்பட்டு, கடந்த 8-ந்தேதி விருந்து நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அன்று மாலை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்து இருந்தார். இதில் ஆடிட்டர்கள், வங்கி அதிகாரிகள், உறவினர்கள், மற்றும் நெருங்கிய நட்பு வட்டாரத்தினர் பங்கேற்றனர். விருந்தினர்களுக்கு ரஜினி விதை பந்து கொண்ட தாம்பூலப்பை கொடுத்து அசத்தினார். 

தற்போது நிகழ்ச்சியில் நம் சூப்பர்ஸ்டார் ஆடிய வீடியோ பதிவு கிடைத்துள்ளது. தனது மகள் திருமணத்தில் தன்னை மறந்து குஷியாக ஆடும் சூப்பர்ஸ்டாரை ரசிகர்களும் ரசித்த வண்ணம் உள்ளனர். 9-ந்தேதி ரஜினி வீட்டில் ராதா கல்யாண வைபவம் நடந்தது. இதில் ரஜினியின் நெருங்கிய உறவினர்கள் மட்டும் பங்கேற்றனர். நேற்றும் திருமணத்துக்கான பல்வேறு சடங்கு நிகழ்ச்சிகள் மற்றும் மெகந்தி விழா நடந்தன. சவுந்தர்யா-விசாகன் திருமணம் இன்று காலை சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடந்தது.

Super Star Rajinikanth Dancing In Soundarya Vishagans Marriage Function Goes Viral

பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணத்தை தொடர்ந்து இன்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது.