கடந்த 2013-ம் ஆண்டு வெளியான யாருடா மகேஷ் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பிற மொழிகளிலும் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தில் கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் சந்தீப். அதைத்தொடர்ந்து நெஞ்சில் துணிவிருந்தால், மாயவன், நரகாசூரன் படத்தில் நடித்தார். 

Sundeep Kishan Tiktok Video Master Vaathi Coming

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் இடம் பெற்ற வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்டாக் செய்து அசத்தியுள்ளார் சந்தீப். கண்களிலேயே இசைக்கு ஏற்றார் போல் புருவத்தை உயர்த்தி டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sundeep Kishan Tiktok Video Master Vaathi Coming 

மாஸ்டர் திரைப்படத்தை XB பிலிம்ஸ் தயாரித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்தில் மாளவிகா மோகனன், ஷாந்தனு, அர்ஜுன் தாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ராக்ஸ்டார் அனிருத்தின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பட்டையை கிளப்பி வருகிறது.