சன் டிவியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் தமிழ் மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஸ்ருதி ராஜ்.இந்த தொடரின் மூலம் மிகவும் பிரபலமான இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்களும் கிடைத்தனர்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆபீஸ் தொடரின் மூலம் சின்னத்திரையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக அவதரித்தார் ஸ்ருதி.

ஆபீஸ் சீரியலின் வெற்றியை தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பான அன்னக்கொடியும் ஐந்து பெண்களும் தொடரில் நடித்தார்.இந்த சீரியலும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து மீண்டும் சன் டிவிக்கு வந்தார் ஸ்ருதி ராஜ்.அபூர்வ ராகங்கள் என்ற தொடரில் நடித்து வந்தார் ஸ்ருதி.இந்த தொடர் 2018-ல் நிறைவடைந்தது.

இதனை தொடர்ந்து 2018 முதல் தற்போது வரை ஒளிபரப்பாகி வரும் அழகு சீரியலில் நடித்து வந்தார்..இந்த சீரியல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சன் டிவியில் TRP-யை அள்ளிக்குவித்து வந்த தொடர்களில் இந்த தொடர் மிகவும் முக்கியமானது.இந்த தொடருக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளமே இருந்து வருகிறது.ரேவதி,தலைவாசல் விஜய்,சங்கீதா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.கொரோனா காரணமாக இந்த தொடரின் ஷூட்டிங் பாதிக்கப்பட்டிருந்தது.

கடந்த மார்ச் இறுதி முதல் ஷூட்டிங்குகள் கொரோனாவால் ரத்தானது.இதனை தொடர்ந்து கடந்த மாதம் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு ஓரிரு நாட்கள் ஷூட்டிங் நடைபெற்றது ஆனால் கொரோனாவின் தாக்கம் குறையாததால் மீண்டும் ஜூன் 19 முதல் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.சென்னையில் கடைபிடித்து வரப்பட்ட முழு ஊரடங்கு கடந்த ஜூலை 5ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.அரசு அறிவித்த தளவுர்கள் நேற்று அமலுக்கு வரும் நிலையில் , ஜூலை 8 முதல் சீரியல் ஷூட்டிங்குகள் நடைபெறலாம் என்று FEFSI அறிவித்திருந்தது.

இந்த தொடரின் ஷூட்டிங் இன்று தொடங்கியது.இந்த தொடர் நிறைவடையப்போகிறது என்று பலரும் சமூகவலைத்தளங்களில் தெரிவித்து வந்தனர்.தற்போது இந்த தொடரில் நடித்து வரும் நடிகர்கள் சிலர் தொடரின் ஷூட்டிங் முடிந்து விட்டது என்றும் கிளைமாக்ஸ் ஷூட்டிங் சமீபத்தில் நடைபெற்றது என்றும்,இந்த ஷூட்டிங்கில் வேலை பார்த்ததை மிகவும் மிஸ் செய்வோம் என்றும் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.இதனை தொடர்ந்து ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த தொடர் திடிரென்று நிறைவுக்கு வருவதை கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

I miss everyone of my family , And thankyou everyone for making me learn things , As it was my 1st serial and my 1st step into acting , I learnt so much from each one of you . A big thanks to Appa ( Thalaivasal Vijay ) Amma ( revathi mam) @iamsruthiraj @vibhu1012 @manikanta_rajesh_official @actresssahana @perazhagi_gayathri @gayatri.jayaraman @laya.vaish murili uncle , Rajesh uncle , shreekutty , akshitha , Vicky macha Thankyou everyone for motivating me and moulding me for what im today , And I'm very sorry, if I had irritated anyone of you in set and hope we will all meet up soon Will miss you my family❣️I LOVE YOU AVINASH -- THIRUNA -- AVINASH journey ENDs

A post shared by Avinash Ashok (@actor_avinash_official) on