சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஒரு நடிகர் சஞ்சீவ்.மெட்டி ஒலி,அண்ணாமலை,ஆனந்தம் உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்த சஞ்சீவ்.சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடரின் நாயகனாக நடித்து பலரின் இதயங்களிலும் இடம்பிடித்தார் சஞ்சீவ்.நடிகராக மட்டுமல்லாமல் தொகுப்பாளராகவும் பல சேனல்களில் பட்டையை கிளப்பியுள்ளார் சஞ்சீவ்.

கலைஞர் டிவியில் இவர் தொகுத்து வழங்கிய மானாட மயிலாட தொடர் பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.தளபதி விஜயின் நெருங்கிய நண்பரான இவர் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.அடுத்ததாக திரைக்கு வரவுள்ள மாஸ்டர் படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் சஞ்சீவ் நடித்துள்ளார்.

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த யாரடி நீ மோகினி தொடரில் ஹீரோவாக நடித்து வந்தார் சஞ்சீவ்.சில காரணங்களால் அந்த தொடரை விட்டு வெளியேறிய சஞ்சீவ் , பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கண்மணி தொடரில் ஹீரோவாக நடிக்க தொடங்கினார்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று நல்ல TRP-யையும் அள்ளி வருகிறது.

கடந்த 2018 அக்டோபர் முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் ஹீரோயினாக லீஷா எக்லர்ஸ் நடித்துள்ளார்.பூர்ணிமா பாக்கியராஜ்,ஹரிப்ரியா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த தொடரில் முக்க்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.ரசிகர்களின் பேராதரவை பெற்று வந்த இந்த தொடர் வரும் வாரத்துடன் நிறைவு பெற உள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த தொடரின் கிளைமாக்ஸ் ஷூட் சமீபத்தில் முடிந்துள்ளது.இந்த புகைப்படங்கள் சிலவற்றை தொடரில் நடிக்கும் நடிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.இந்த தொடர் திடிரென்று நிறுத்தப்படுவதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

A post shared by Shambhavy Gurumoorthy (@shambhavy_gurumoorthy_official)