தமிழ் படங்களில் நடித்தாலும் பிக்பாஸ் முதல் சீசன் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை சுஜா வருணி. சிவாஜி கணேசனின் பேரன் சிவாஜி தேவை கரம் பிடித்தார். சமீபத்தில் இவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 

Suja Varunee Shares Her Kid Smiling Video

கொரோனா காரணமாக வீட்டிலேயே பாதுகாப்பாக முடங்கியுள்ள திரை பிரபலங்கள் உடற்பயிற்சி, வீட்டு வேலைகள், நடனம், பாடல், சமையல் என பல வீடியோக்களை பதிவு செய்து வருகின்றனர். ஊரடங்கால் படப்பிடிப்பு எங்கேயும் செல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக உள்ளனர். ஒரு சில பிரபலங்கள் லைவ்வில் தோன்றி ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். 

Suja Varunee Shares Her Kid Smiling Video

இந்நிலையில் சுஜா வருணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகனின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அவரது மகன் சிரிக்கும் வீடியோவை பதிவிட்டுள்ள அவர், எனது மகன் சிரிக்கும் போது, மனது லேசாகி விடுகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.