தமிழ் திரையுலகில் மாஸ் நிறைந்த படங்களை இயக்கும் இயக்குனர்களில் ஒருவர் விஜய் சந்தர். STR நடித்த வாலு திரைப்படத்தின் மூலம் இயக்குனராக கால் பதித்தவர், தொடர்ந்து ஸ்கெட்ச், சங்கத்தமிழன் போன்ற எதார்த்த படைப்புகளை தந்தார். தனது அடுத்த படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளில் பிஸியாக இருக்கும் விஜய் சந்தர், தனது திரை அனுபவம் பற்றியும் STR, சியான் விக்ரம், மக்கள் செல்வன் விஜய்சேதுபதி போன்ற உச்ச நட்சத்திரங்களோடு பணியாற்றியது குறித்தும் கலாட்டா லைவ்வில் பகிர்ந்துள்ளார். 

STR To Do New Film With Director Vijay Chandar

தனது அடுத்த படத்தின் ஹீரோ STR தான் என்ற ருசிகர தகவலை ரசிகர்களுக்கு தெரிவித்தார். டிஸ்கஷனில் உள்ளதாம் இந்த ப்ராஜெக்ட். இந்த கொரோனா லாக்டவுனில் ஸ்கிரிப்ட் பணியில் தீவிரம் காட்டி வருவதாக விஜய் சந்தர் தெரிவித்தார். லாக்டவுனில் விஜய் சந்தரை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட STR, ஸ்கிரிப்ட் குறித்தும் பேச்சு வார்த்தை நடத்தினாராம். இப்போதைக்கு இவ்வளவு தான் கூற இயலும், விரைவில் இந்த ப்ராஜெக்ட் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று கூறினார். 

STR To Do New Film With Director Vijay Chandar

நிச்சயம் இந்த காம்போ மாஸாக இருக்கும் என்று கமெண்ட் செய்து வருகின்றனர் STR ரசிகர்கள். ஊரடங்கு முடிந்தவுடன் வெங்கட் பிரபு இயக்கும் மாநாடு படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் STR.