சிலை கடத்தல் தொடர்பாக நித்யானந்தா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர் சாமியார் நித்யானந்தா. சமீப காலமாக நித்யானந்தா, இணையத்தில் தொடர்ந்து வீடியோ வெளியிட்டு அதில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்.

Statue theft case

அதன்படி, தனது கட்டளைப் படியே, சூரியனே 40 நிமிடங்கள் தாமதமாக உதித்தது என்று கூறி சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியின் அருகே அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் சிவன் கோயில், போன ஜென்மத்தில் தன்னால் கட்டப்பட்டது என்றும், அந்த கோயிலிலிருந்த மூலவரான லிங்க சிலை, தன்னிடம் தற்போது இருப்பதாகவும் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Nithyananda

இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனால், நித்யானந்தா திருடிய பாலவாடி கோயிலுக்குச் சொந்தமான சிலையை மீட்டுத் தரும்படி, அந்த கிராமத்தைச் சேர்ந்த வேலுசாமி, மற்றும் சக்திவேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதனையடுத்து, ஜலகண்டேஸ்வரர் கோவிலில் இருந்த லிங்கத்தின் சிலை சாமியார் நித்யானந்தாவிடம் தான் உள்ளதா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Nithyananda

மேலும், இது தொடர்பாகத் தமிழக சிலை கடத்தல் பிரிவு போலீசார் தலையிட்டு விசாரணை நடத்தி, நித்யானந்தாவிடம் இருந்து சாமி சிலையை மீட்க வேண்டும் என்று பாலவாடி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.