இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.

sooraraipottru

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. படத்தில் நடிகர் சூர்யா மாறா தீம் பாடலுக்கு ராப் பகுதி பாடியுள்ளார் என்பது சமீபத்தில் தெரியவந்தது.

aparnabalamurali

இன்று நடைபெற்ற தம்பி இசை வெளியீட்டு விழாவில் பேசிய 2டி நிறுவனத்தினர், சூரரைப் போற்று திரைப்படத்தின் டீஸர் வரும் பொங்கல் 2020-ல் வெளியாகும் என்ற ருசிகர செய்தியை தெரிவித்தனர். இதை கேட்ட சூர்யா ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.