சூரரைப் போற்று படத்தில் இணைந்த பிரபல இயக்குனர் !
By Sakthi Priyan | Galatta | November 13, 2019 17:12 PM IST

இறுதிசுற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துவரும் படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார்.
நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த சூரரை போற்று படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. மேலும் படத்தில் நடிகர் சூர்யாவின் பெயர் நெடுமாறன் என்ற தகவலும் கிடைத்துள்ளது. இப்படத்தின் முதல் லுக் நவம்பர் 10-ம் தேதி வெளியாகி அசத்தலான வரவேற்பை பெற்றது. படத்தின் டீஸருக்காக மாறா தீம் சாங் இசையமைக்க உள்ளதாக ஜிவி பிரகாஷ் பதிவு செய்துள்ளார். தற்போது இயக்குனர் அருண்ராஜா காமராஜ் படத்தில் பாடல் எழுதவுள்ளதாக ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.