சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் ஆஸ்கார் விருது பெற்ற குனிட் மோங்கா துணை தயாரிப்பாளராக பணிபுரிகிறார். 

suriya

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. 

2dentertainment sooraraipottru

சமீபத்தில் படத்தின் டீஸர் வெளியாகி பட்டையை கிளப்பியது. படத்தில் இடம்பெற்ற மாறா தீம் பாடல் நேற்று வெளியாகியது. சூர்யா பாடிய இந்த பாடல் வரிகளை தெருக்குறள் அறிவு எழுதியுள்ளார். தற்போது படத்தின் கேரள திரையரங்க உரிமையை ஸ்பார்க் பிக்சர்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளது.