பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் சோனம் கபூர்.பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அணில் கபூரின் மகளான இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக அறிமுகமாகி சில படங்களிலேயே ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார்.குறுகிய காலத்திலேயே இளைஞர்களின் மனம் கவர்ந்து கனவு கன்னியாக மாறினார்.

Saawariya என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவர் தொடர்ந்து டெல்லி-6,I Hate Luv Storys,    Thank You,    Bombay Talkies உள்ளிட்ட பல சூப்பர்ஹிட் படங்களில் ஹீரோயினாக நடித்திருந்தார்.தனுஷ் பாலிவுட்டில் நாயகனாக ஹிந்தியில் அறிமுகமான Ranjannah படத்தில் இவர் ஹீரோயினாக நடித்திருந்தார்.இந்த படம் வசூல் சாதனை படைத்தது.

இதனை தொடர்ந்து Bhaag Milkha Bhaag,Neerja,Pad Man,Sanju உள்ளிட்ட ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பல படங்களில் நடித்திருந்தார்.இதில் நீரஜா படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருதையும் வென்றிருந்தார் சோனம் கபூர்.இவருக்கு கடந்த 2018-ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் Anand Ahuja-வுடன் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பிறகு அதிக படங்களில் நடிக்காத சோனம் கபூர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்கள் உள்ளிட்டவரை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார் சோனம் கபூர்.புத்தாண்டு தொடங்கியததை அடுத்து தனது கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் முத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் சோனம் கபூர்.இந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

A post shared by Sonam K Ahuja (@sonamkapoor)