சிறந்த இயக்குனர் மற்றும் சீரான நடிகர் எனும் புகழுக்கு சொந்தக்காரர் SJ சூர்யா. இவர் இயக்கத்தில் கடந்த 2000-ம் ஆண்டு வெளியான திரைப்படம் குஷி. விஜய் மற்றும் ஜோதிகாவின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம். ரிலீஸாகி 20 ஆண்டுகள் ஆகியும் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படத்தின் துவக்கத்திலேயே கதையையும் முடிவையும் சொல்லிவிட்டு தனது சுவாரஸியமான திரைக்கதையால் பார்வையாளர்களை பிரம்மிக்க வைத்திருப்பார் SJ சூர்யா. 

SJ Suryah Shares A Kushi Movie Meme

இந்நிலையில் SJ சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் மீம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் சாமி திரைப்பட காமெடி காட்சியில், டிராஃபிக் போலீஸிடம் விவேக், வண்டில உட்காருங்க 7 போட்டுக்காட்டுறேன் என்று கூறுவார். அந்த காட்சியை மாற்றி, ஒரு ஹீரோவும் ஹீரோயினும் ஒன்னு சேருவது தான் கதை என்று தயாரிப்பாளரிடம் சொல்வது போலவும், அதற்கு இதை எப்படி படமாக எடுப்ப ? என்று தயாரிப்பாளர் கேட்க, உட்காரும் ஓய் எடுத்துக்காட்டுறேன் என்று சொல்வது போல் இந்த மீம் உருவாக்கப்பட்டுள்ளது. 

SJ Suryah Shares A Kushi Movie Meme

SJ சூர்யா கைவசம் பொம்மை திரைப்படம் உள்ளது. ராதா மோகன் இந்த படத்தை இயக்கியுள்ளார். செல்வராகவன் இயக்கத்தில் உருவான நெஞ்சம் மறப்பதில்லை திரைக்கு வர அதிக வாய்ப்புகள் உள்ளது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.