இயக்கம், நடிப்பு, இசை என சினிமா சார்ந்த செயல்களில் ஈடுபட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பிடித்தவர் எஸ்.ஜே.சூர்யா. இவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி வெற்றி பெற்ற படம் மான்ஸ்டர். இப்படத்தை தொடர்ந்து ராதாமோகன் இயக்கத்தில் பொம்மை படத்தில் நடித்துள்ளார். இதில் முக்கிய பாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் மற்றும் சாந்தினி நடித்துள்ளனர். 

SJ Suriyas Bommai Movie Latest Update

காதல் கலந்த ஒரு திரில்லர் படமாக உருவாகி வரும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஆண்டனி எடிட்டிங் செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அமோக வரவேற்பை பெற்றது. கனல் கண்ணன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைத்தார். 

SJ Suriyas Bommai Movie Latest Update

சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவு பெற்றது. தற்போது படத்தின் ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் எம்.நாதன் தனது ட்விட்டர் பக்கத்தில், புகைப்படத்துடன் புதிய அப்டேட் ஒன்றை தெரிவித்துள்ளார். அதில் பொம்மை படத்தின் DI எனப்படும் கலர் கரெக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருப்பதாகவும், அரசு அறிவுறுத்தலின் படி குறைந்த ஆட்கள் கொண்டு போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளை பொம்மை படக்குழுவினர் துவங்கியதாக தெரிகிறது. புகைப்படத்தை வைத்து பார்க்கையில் பாடல் காட்சி போல் தெரிகிறது என கமெண்ட் செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.