நம்ம வீட்டு பிள்ளை படத்தின் வெற்றியை தொடர்ந்து சிவகார்த்திகேயன் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.இதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் SK 17 படத்தில் நடிக்கவுள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.

Sivakarthikeyan SK 17 Not Produced By Boney Kapoor

இந்த படத்தில் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.ரொமான்டிக் காமெடி படமாக உருவாகவுள்ள இந்த படத்தினை லைகா ப்ரொடுக்ஷன்ஸ் தயாரிப்பதாக இருந்தனர்.இந்த படத்தில் இருந்து சில காரணங்களால் லைகா நிறுவனம் விலகியுள்ளது என்றும் இந்த படத்தை போனி கபூர் தயாரிப்பார் என்றும் தகவல்கள் கிடைத்தது.

Sivakarthikeyan SK 17 Not Produced By Boney Kapoor

தற்போது இந்த படத்தை போனி கபூர் தயாரிக்கவில்லை என்ற தகவல் நெருங்கிய வட்டாரங்களிடம் இருந்து கிடைத்துள்ளது.மேலும் இந்த படத்தை லைகா நிறுவனமே தயாரிக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது.போனி கபூர் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனை சந்தித்தது தல 60 ஹீரோயின் குறித்து இருக்கலாம் என்று தெரிகிறது.

Sivakarthikeyan SK 17 Not Produced By Boney Kapoor

Sivakarthikeyan SK 17 Not Produced By Boney Kapoor