ஆறிலிருந்து அறுபது வரை என அனைத்து தரப்பு ரசிகர்களையும் தனது நடிப்பால் ஈர்த்து வரும் நடிகர் சிவகார்த்திகேயன். SK ப்ரொடக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் திரைப்படம் டாக்டர். நெல்சன் திலீப்குமார் இந்த படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் ப்ரியங்கா அருள் மோகன், வினய், யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர். 

இதுவரை இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளது. கொரோனா காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்ட நிலையில் லாக்டவுனில் எடிட்டிங் பணிகள் நடந்து வந்தது. கடைசியாக படத்தின் பிரத்தியேக புகைப்படங்கள் வெளியாகி பட்டையை கிளப்பியது. 

இதைத்தொடர்ந்து ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகிவரும் படம் அயலான். சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 24AM ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. கருணாகரன், இஷா கோபிகர், பாலசரவணன் ஆகியோர் உள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இப்படத்தின் CG பணிகள் ஒருபக்கம் இருக்க, படப்பிடிப்பும் மீதம் உள்ளது போல் தெரிகிறது. 

இப்படியிருக்க சிவகார்த்திகேயன் குறித்த செய்திகள் ஏதாவது வராதா என்று ஏங்கி கிடந்த ரசிகர்களுக்கு Mr. லோக்கல் படத்தின் ஒரிஜினல் ஸ்கோர் மியூசிக் வீடியோவை வெளியிட்டு அசத்தியுள்ளனர் திங்க் மியூசிக் நிறுவனம். ஹிப் ஹாப் ஆதியின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். கடந்த ஆண்டு ராஜேஷ் இயக்கத்தில் இந்த படம் வெளியானது. 14 பிஜிஎம் நிறைந்த இந்த வீடியோ அனைவரையும் ஈர்த்து வருகிறது.