தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இயக்கத்தில் உருவான ஹீரோ படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.

Sivakarthikeyan Hero Movie Back on Amazon Prime

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Sivakarthikeyan Hero Movie Back on Amazon Prime

இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.சில நாட்களுக்கு முன் கதை திருட்டு விவகாரம் காரணமாக இந்த படம் OTTயில் இருந்து நீக்கப்பட்டடது.இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு தற்போது இந்த படம் மீண்டும் OTTயில் வெளியாகியுள்ளது.