சிவகார்த்திகேயன் ஹீரோ படத்தின் ரிலீஸை அடுத்து SK ப்ரொடுக்ஷன்ஸுடன் இணைந்து KJR நிறுவனம் தயாரிக்கும் டாக்டர் படத்தில் ஹீரோவாக  நடிக்கிறார்.சிவகார்த்திகேயனின் நீண்ட கால நண்பரும்,கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனருமான நெல்சன் இந்த படத்தை இயக்குகிறார்.

Sivakarthikeyan Doctor Update By Director Nelson

அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தில் வினய்,யோகி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில்நடிக்கின்றனர்.கேங் லீடர் தெலுங்கு படத்தில் நடித்த ப்ரியங்கா மோகன் இந்த படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.

Sivakarthikeyan Doctor Update By Director Nelson

இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்திருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது.

Sivakarthikeyan Doctor Update By Director Nelson

இந்த படத்தின் ரிலீஸ் குறித்து தகவல்கள் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து படத்தின் இயக்குனர் நெல்சனிடம் விசாரித்தபோது டாக்டர் படத்தின் ஷூட்டிங் முடிந்தவரை எடிட்டிங் உள்ளிட்ட வேலைகள் நடந்து வருகின்றன என்றும், படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு அரசு சொல்லும் நிபந்தனைகளை பொறுத்து எங்கு நடக்கும் என்று முடிவுசெய்யப்படும் என்றும் தெரிவித்தார்.ரிலீஸ் தேதி குறித்து இன்னும் முடிவுசெய்யவில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
 

Sivakarthikeyan Doctor Update By Director Nelson